T20 World Cup: பார்படாஸ் மண்ணை தின்ற ரோஹித் ஷர்மா - ஏன் தெரியமா?
டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு பிட்ச் மண்ணை தின்றது ஏன் என்பது குறித்து ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அப்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா வித்தியாசமாக ஆடுகளத்தில் இருந்த மண்ணை எடுத்து தின்றார்.
இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ அப்போது வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரோஹித் ஷர்மா "இந்த வெற்றியை இந்த ஆடுகளம் தான் எங்களுக்கு வழங்கியது.
மறக்க மாட்டேன்
இந்த ஆடுகளத்தில் விளையாடி தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறோம். எனவே, இந்த பார்படாஸ் மைதானத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்குள் இருக்க வேண்டும்,
என்னுள் கலக்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வாறு செய்தேன். என்னுடைய ஒட்டுமொத்த கனவும் பார்படாஸ் மண்ணில் தான் நிஜமாகியிருக்கிறது. இதனால் தான் அதனை எடுத்து சாப்பிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.