நேபாளம் கூட அந்த வீரரை தங்களது அணியில் சேர்க்காது - கொந்தளித்த வீரர்!
நேபாள அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.
பாபர் அசாம்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நேபாள அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என்று கேட்டால், பாபர் அசாம் என்று தான் சொல்வோம்.
நேபாள அணி கூட..
ஆனால், குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் பிளேயிங் லெவனில் பாபர் அசாமுக்கு இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால்,
என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான். என்னை கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது" என்று தெரிவித்துள்ளார்.