பும்ரா மட்டுமல்ல.. இந்திய அணியில் யார் பவுலிங் போட்டாலும் அடிப்பேன் - எச்சரித்த பிரபல வீரர்!
பும்ரா மட்டுமின்றி தம்முடைய இடத்தில் யார் பவுலிங் வீசினாலும் அடிப்பேன் என்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
ரஹ்மனுல்லா குர்பாஸ்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணி பவுலரான ஜஸ்பிரித் பும்ரா மட்டுமின்றி தம்முடைய இடத்தில் யார் பவுலிங் வீசினாலும் அடிப்பேன் என்று ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
நான் அடிப்பேன்
அவர் கூறியதாவது "உண்மையில் என்னுடைய இலக்கு பும்ரா மட்டும் கிடையாது. பும்ராவை தாண்டி நான் அனைத்து பவுலர்களையும் டார்கெட் செய்வேன். 5 பவுலர்கள் பந்து வீசுவார்கள். அவர்கள் அனைவரையும் எதிர்கொள்வேன்.
பும்ராவை அல்லாமல் வேறு ஏதேனும் பவுலர் கூட என்னை அவுட்டாக்கலாம். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இடத்தில் பந்து வீசினால் பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் போன்ற யாரை வேண்டுமானாலும் அடிப்பேன். ஒன்று அவுட்டாவேன் அல்லது அவர்களை நான் அடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.