கடைசி போட்டியோடு ஓய்வு பெறும் ரோஹித் சர்மா? அடுத்த கேப்டன் இவர்தான்!
நாளைய போட்டியுடன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
IND vs NZ
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. லீக் சுற்றில் டாப் இடத்தை பிடித்த இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இதில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கவுள்ளது.
ரோஹித் ஷர்மா ஓய்வு?
இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இளம் வீரர்களான கில் அல்லது ஹர்திக் பாண்டியா அல்லது ஸ்ரேயஸ் ஐயர் வசம் கேப்டன்சி ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.