சச்சின், தோனி, யுவராஜ் சிங்கிற்கு எவ்வளவு பென்ஷன் தெரியுமா? காம்ப்ளிக்கு ரூ.30,000
இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ மாதம் எவ்வளவு பென்ஷன் வழங்குகிறது தெரியுமா?
இந்திய அணி
இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்குகிறது. இதன்படி, மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும் வழங்கியது.
இந்தியாவை உலகக் கோப்பை வெல்ல வைத்த தோனி, பிசிசிஐயிடமிருந்து மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் பெறுகிறார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் பிசிசிஐயிடமிருந்து மாதந்தோறும் 60 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்.
பென்ஷன் விவரம்
அதேபோல் யுவராஜ் சிங் 2022 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். தொடர்ந்து அவருக்கு பிசிசிஐ மாதந்தோறும் 60,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்து கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
தற்போது பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தையே தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.