திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித் - என்ன காரணம்?
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்
கடந்த 2010-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக இறங்கியவர் ஸ்டீவ் ஸ்மித்(35). மொத்தம் 170 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,800 ரன்களை எடுத்துள்ளார்.
12 சதம் மற்றும் 35 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் நாக்-அவுட் போட்டிகளில் 418 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2023-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தில் ஸ்மித் அறிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் ஓய்வு
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இது சிறந்தவொரு பயணமாக இருந்தது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தது உண்டு. மறக்க முடியாத அற்புத தருணங்கள் மற்றும் அற்புத நினைவுகள் இதில் அடங்கும். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளேன்.
எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு அணி சிறந்த முறையில் தயாராக இது சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உடனான டெஸ்ட் தொடர்களை எதிர்பார்த்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
