ரோஹித்துக்காக காத்திருக்கும் அணி; வேறமாறி இருக்கும் - அவர் சொன்னத கவனிச்சீங்களா?
ரோஹித் ஷர்மா குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் படுதோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார்.
ஆனால், நடப்பாண்டு தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை அணி நிர்வாகம் நியமித்தது. இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் தொடக்கம் முதலே ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ரோஹித்-பாண்டியா இடையில் ஒவ்வொரு போட்டியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வாசிம் அக்ரம்
இதற்கிடையே ரோஹித் ஷர்மா மும்பை அணியிலிருந்து விலக இருப்பதாகவும் 2025 ஐபிஎல் தொடரில் அவர் வேறு அணியில் இணையலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் ரோஹித் ஷர்மா குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "அடுத்த சீசனில் ரோகித் சர்மா மும்பை அணியுடன் இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அவர் கேகேஆர் அணியில் இணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், ரோஹித் ஷர்மா தொடக்க வீரர், கம்பீர் ஆலோசகர், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர். கேகேஆர் அணியின் பேட்டிங் வேறு மாதிரி இருக்கும். கொல்கத்தா பிட்சில் ரோஹித் ஷர்மா எப்போதும் வேற லெவலில் பேட்டிங் செய்வார்" என்று தெரிவித்துள்ளார்.