தோனி கிடையாது.. கேப்டன்ஷிப்பில் அவர் தான் எனக்கு ரோல் மாடல் - சுப்மன் கில்!
ரோஹித் ஷர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "நீங்கள் ரோஹித் பாய், மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் போன்ற அனைவரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம்.
கேப்டன்ஷிப்
அவர்கள் அனைவருக்கும் சிறந்த குணங்கள் இருக்கிறது. ஆனாலும், நான் அதிகமாக விளையாடியது ரரோஹித் பாய் தலைமையில் தான். அதனால், கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரை பார்த்து கற்றுக் கொள்கிறேன்.
அவர் கேப்டன்ஷிப்பில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.