ரோஹித்தின் 2வது மனைவி ராகுல் டிராவிட் - ரித்திகா சொன்ன விஷயம்..?

Rohit Sharma Cricket Indian Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath Jul 09, 2024 03:00 PM GMT
Report

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா உருக்கமான பாராட்டை தெரிவித்துள்ளார்

ராகுல் டிராவிட்

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ரோஹித்தின் 2வது மனைவி ராகுல் டிராவிட் - ரித்திகா சொன்ன விஷயம்..? | Rohit Sharma Heartfelt Note To Rahul Dravid

இந்த வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட போட்டிகளில் மூவரும் தொடர்ந்து விளையாடவுள்ளனர். மேலும், இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரோஹித் ஷர்மா உருக்கமான பாராட்டை தெரிவித்துள்ளார்.

காலியாகும் பதவி.. ராகுல் டிராவிட்டை தட்டித் தூக்கும் IPL அணி? வெளியான தகவல்!

காலியாகும் பதவி.. ராகுல் டிராவிட்டை தட்டித் தூக்கும் IPL அணி? வெளியான தகவல்!

ரோஹித் ஷர்மா

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் "டியர் ராகுல் பாய்.. என்னுடைய சிறு வயது நாட்களிலிருந்தே பல பில்லியன் ரசிகர்களைப் போல நானும் உங்களை பார்த்து வளர்ந்தேன்.

ரோஹித்தின் 2வது மனைவி ராகுல் டிராவிட் - ரித்திகா சொன்ன விஷயம்..? | Rohit Sharma Heartfelt Note To Rahul Dravid

ஆனால், அதையும் தாண்டி உங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய பாராட்டுக்கள், சாதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் வாசலில் விட்டு விட்டு பயிற்சியாளராக நடந்து வந்து நாங்கள் நினைக்கும் அனைத்தையும் உங்களிடம் சொல்ல வசதியாக உணரும் அளவுக்கு வந்தீர்கள்.

அதுவே உங்கள் பரிசு, உங்கள் பணிவு மற்றும் இந்த விளையாட்டின் மீதான உங்கள் அன்பு. நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நினைவும் பாராட்டப்படும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் தான் என்னுடைய மனைவி என்று என் மனைவி (ரித்திகா சஜ்தே) குறிப்பிடுவார்.

அப்படி அழைப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். உலகக் கோப்பையை நாம் ஒன்றாக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ராகுல் பாய்.. உங்களை நம்பிக்கைகுரியவர், பயிற்சியாளர், எனது நண்பர் என்று அழைப்பது முழுமையான பாக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.