காலியாகும் பதவி.. ராகுல் டிராவிட்டை தட்டித் தூக்கும் IPL அணி? வெளியான தகவல்!
ராகுல் டிராவிட்டை ஆலோசகராக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் டிராவிட்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
கொல்கத்தா அணி
இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
ஒருவேளை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டால், அவர் கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த அணியின் ஆலோசகர் பதவி காலியாகும். இந்நிலையில் ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் ஆலோசகராக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
