'மூளையை யூஸ் பண்ணனும்' - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ரோஹித் ஷர்மா பதிலடி!
பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டுக்கு இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
குற்றச்சாட்டு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மேலும், இன்றே நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதனிடையே இந்திய அணி மீது பந்தினை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் குற்றம் சாட்டியிருந்தார்.
ரோஹித் பதிலடி
இது பேசுபொருளான நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது "நான் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் சகோதரரே. இங்கு ஆடுகளம் மிகவும் வறண்டிருக்கிறது.
வெயிலில் விளையாடுகிறோம். எல்லா அணிகளுக்கும் ஸ்விங் ஆகிறது. சில நேரங்களில் மூளையை பயன்படுத்த வேண்டும். இங்கு ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இது இங்கிலாந்தோ, ஆஸ்திரேலியாவோ கிடையாது. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
