டி20 உலகக்கோப்பை; என்ன செய்றதுனே தெரியல - மனம் திறந்த ரோஹித் ஷர்மா!
டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா இறுதிப்போட்டி குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
2024 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா இறுதிப்போட்டி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "தென்னாப்பிரிக்காவிற்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது நாங்கள் மிகவும் அழுத்தத்தில் இருந்தோம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அடுத்து நடக்கப்போவதை பார்க்கவில்லை.
கடைசி 5 ஓவர்
நான் அமைதியாக இருந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அது முக்கியமாக இருந்தது. நாங்கள் எங்கள் திட்டத்தை செயல்படுத்தினோம். நாங்கள் எந்தளவு அமைதியாக அந்த சூழலை கையாண்டோம் என்பதை கடைசி 5 ஓவர் காட்டுகிறது.
எங்கள் வேலையில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினோம். என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் பதற்றம் அடையவில்லை. அதுதான் எங்கள் பக்கம் இருந்த மிகவும் நல்ல விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.