T20 World Cup: 17 ஆண்டுகள்.. டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி!
11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 (59), அக்சார் பட்டேல் 47 (31), ஷிவம் துபே 27 (16) ரன்களும் விளாசியிருந்தனர். தென்னாப்பிரிக்க பவுலர்கள் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மஹராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி
இதனையடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஸ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.