கேப்டன்ஷிப் பற்றிய ஐடியா கூட சுப்மன் கில்லுக்கு இல்லை - விளாசிய பிரபல வீரர்!
சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
அமித் மிஸ்ரா
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார். அவர் கூறுகையில் "நான் அவரை (சுப்மன் கில்) கேப்டனாக தேர்வு செய்திருக்க மாட்டேன். கடந்த ஐபிஎல் தொடரை பாருங்கள். குஜராத் அணியில் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
ஐடியா கூட இல்லை
இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது. கேப்டனாக அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்திய அணி நிர்வாகம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கலாம்.
ஆனால், குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட போது அவரிடம் தலைமை பண்புகள் வெளிப்படவில்லை. கேப்டன்ஷிப் பற்றிய ஐடியா கூட அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியில் இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை கேப்டனாக நியமிக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார்.