சமுக நீதி பேசும் தமிழகத்தில் தலித் மக்களுக்கு... ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 %வரை உயர்த்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.என்.ரவி
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியா முந்தைய காலகட்டத்தில் பல வேற்றுமைகளைக் கொண்டு இருந்தது. இதனை அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் ஒன்றிணைத்து சம உரிமை, சமநீதி கிடைக்கப் போராடியவர் அம்பேத்கர் தான் என்று கூறினார்.
தலித்
அதுமட்டுமில்லாமல், பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்ற அப்போதைய நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததால் தனது அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
இப்போது தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சம உரிமை, சமநீதி என்று கூறிக்கொண்டு தங்களுடைய நலனுக்காகப் பேசி வருகின்றனர். குறிப்பாக சமூக நீதி பேசும் தமிழகத்தில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 %வரை உயர்த்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.