முடிவடைந்த பதவிக்காலம் - மாற்றப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி? டெல்லி பயணத்தின் பின்னணி

Tamil nadu Government of Tamil Nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Karthick Jul 19, 2024 09:32 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தகத்து.

ஆர்.என்.ரவி

தமிழக ஆளும் திமுக அரசுக்கு பெரும் இடைஞ்சலாகவே இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சர்களில் துவங்கி முதல்வருடனும் அவருக்கு மாற்றுக்கருத்து பெரிதாகவே உள்ளது.

RN Ravi

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததில் துவங்கி, திருவள்ளுவர் சர்ச்சை, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியுடன் ஏற்பட்ட பிரச்சனை என பிஸியாகவே உள்ளார் ஆர்.என்.ரவி.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளும் அவரை வெளியேற வேண்டும் என்றெல்லாம் கடுமையாக பேசினார்கள். உண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31- ஆம் மாதத்துடன் முடிவடைவதாக தகவல் உள்ளது.

RN Ravi ponmudi

தமிழகத்தில் செப்டம்பர் 2021-ஆம் ஆண்டு ஆளுநராக வந்தவர், அதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்டிப்பா 

இந்த நிலையில் தமிழகத்திற்கு புதியதாக ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது ஆர்.என்.ரவியே நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

RN Ravi

கடந்த 15-ஆம் தேதி டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு பிரதமர் மோடியில் துவங்கி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.