தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அமைச்சரவை
2021-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தற்போது வரை 3 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டது. நடைபெற்ற உள்ளாட்சி, மக்களவை தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
நடைபெற்று வரும் ஆட்சியில் மக்களுக்கு மனக்கசப்பான சில விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது தமிழக அமைச்சரவையு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் மாற்றத்தில் துவங்கி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
மாற்றம்?
தற்போது மீண்டும் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதியில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
அதற்கு முன்பாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராக பதவி உயர்வு வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. ஆனால், அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை.
அமைச்சரான போதிலிருந்தே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது என தொடர்ந்து எழுதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.