தொடர்ந்து வரும் வெற்றி - துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? 23-ஆம் தேதி நடக்கும் சம்பவம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா என்ற பேச்சு அவ்வப்போது அடிபட்ட வண்ணமே உள்ளன.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவின் மீது வைக்கப்படும் பெரிய குற்றச்சாட்டே அவர்கள் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று தான். முதலில், கலைஞர் முதல்வர் - அப்போது ஸ்டாலின் துணை முதல்வர், இப்பொது ஸ்டாலின் முதல்வர் - உதயநிதி அமைச்சர், கனிமொழி எம்.பி என லிஸ்ட் பெரிசு.
இதுவே திமுக மீது வைக்கப்படும் முதல் முக்கிய குற்றச்சாட்டு. முன்னதாக இன்பநிதி குறித்து சில திமுகவினர் பேச, அது கடும் கண்டனங்களை பெற்றது. திமுக அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பலரும் உதயநிதி புகழ்ந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் கவனிக்கப்படுவது அவரை துணை முதல்வராக பலரும் பேசுவது தான்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி செய்தி வந்துவுடனும் தற்போது அதே மாதிரியான பேச்சு வெளிவர துவங்கி விட்டது. மதுரையில் ஆவின் நிறுவனத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
23-ஆம் தேதி
அதற்கு பதிலளித்தவர், அவருக்கு அதற்கான முழு தகுதியுள்ளது. மக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். ஆகையால் அவர் எப்போது துணை முதல்வரானாலும் அது மகிழ்ச்சியான விஷயம் என தெரிவித்தார்.
அதே போல சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இந்த தேர்தலில் திமு கழகத்தின் சார்பில் இரவு பகலாக உழைத்த உதயநிதி ஸ்டாலின்...அவர் கால் வைத்த நேரத்தில் இருந்து எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான். அடுத்தடுத்த இது போன்ற புகழ்ச்சி உதயநிதி பக்கம் வந்துள்ள நேரத்தில், மீண்டும் துணை முதல்வர் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் வரும் 23-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் ரீதியில் அமெரிக்கா செல்கிறார்.
அப்போது அவர் உதயநிதியை துணை முதல்வராக நியமிப்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.