அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - பா.ஜ.க. பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி
தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் , வெள்ளநீரை வெளியேற்றவும் அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
இதனையடுத்து வெள்ள பாதிப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈட்டுப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அமைச்சர் பொன்முடி மீது சாலையில் கிடந்த சேற்றை வாரி வீசினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் அந்த இடத்திலிருந்து வெளியேறினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பா.ஜ.க. பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்