பிரபல பெண் தொகுப்பாளரை துரத்திய மர்ம நபர் - பதற்றத்தில் வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே..!

Tamil Cinema Bigg Boss Tamil Nadu Police
By Thahir Jun 14, 2022 08:15 AM GMT
Report

பிரபல பெண் தொகுப்பாளரான ஆர்.ஜே வைஷ்ணவியை மர்ம நபர் ஒருவர் துரத்தியதாக வீடியோ ஒன்றை சமூக வளைத்தலத்தில் பதிவிட்டுள்ளார்.

பின் தொடர்ந்த மர்ம நபர்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர் வைஷ்ணவி.

இவர் தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் மர்ம நபர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபல பெண் தொகுப்பாளரை துரத்திய மர்ம நபர் - பதற்றத்தில் வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே..! | Rj Vaishnavi Follow Unknown Person

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,தான் நடைபயிற்ச்சிக்கு தனது நாயுடன் சென்ற போது ஒரு நபர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

தான் தங்கியிருக்கும் வீட்டை வாலிபர் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தான் 30 நிமிடங்கள் வீட்டுக்குச் செல்லாமல் பதற்றத்துடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய காவல் துறை

தன்னை பின்தொடர்ந்த நபர் குறித்து புகார் அளிப்பதற்காக போன் பேசுவது போல் வீடியோ எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.ஜே.வைஷ்ணவியின் இந்த செயலுக்கு காவல்துறையினர் சமூக வளைத்தலத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புகார் குறிதது விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்துமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.

பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்!