ஊர்வசி இங்கே வாடி...படப்பிடிப்பு தளத்தில் ஆர்.ஜே.பாலாஜி செய்த செயல்..!
ஊர்வசி இங்கே வாடி என ஆர்.ஜே.பாலாஜி கூப்பிட்டான் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
திரைக்கதை
ஹிந்தியில் வெளியாகி நல்ல வெற்றி அடைந்த திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் ஒரு இருபத்தி ஐந்து வயது நிரம்பிய இளைஞனின் அம்மா கர்ப்பமானால்,
அந்த குடும்பம் என்ன மாதிரியான சிக்கல்களை சமூகத்தில் சந்திக்கும் என்பதை மிகவும் கலகலப்பாகவும் எதார்த்தமாகவும் காட்டிய திரைப்படம் பாதாய் ஹோ.
இதனை தமிழில் ரீமேக் செய்து உள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
நடிகை ஊர்வசி பேச்சு
ஊர்வசி அம்மாவாகவும் சத்யராஜ் அப்பாவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய ஊர்வசி தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசி முடித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென பாலாஜி, ஊர்வசி இங்கே வாடி என்று கூப்பிட்டான் என்று ஊர்வசி கூற, அருகிலிருந்த ஆர்ஜே பாலாஜி, அது உங்களுக்கு கேட்காது என நினைத்திருந்தேன், கேட்டு விட்டதா என்று கலகலப்பாக பேசி சமாளித்தார்.