‛அம்மா எனர்ஜி தரிசனம்’ தலைக்கு ரூ.700 - ரூட்டை மாற்றி பக்கா ப்ளான் போட்ட அன்னபூரணி அரசு அம்மா!
கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடவுளின் அவதாரம் என்று கூறி, அருளாசி கொடுக்க புறப்பட்ட நேரத்தில் ‘சடன் ப்ரேக்’ போட்டு விட்டார்கள் அன்னபூரணி அரசு அம்மாவுக்கு. இதனால், உச்சகட்ட கடுப்பானார் அன்னபூரணி. சமூகவலைத்தளத்தில் அவரைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்ற ஏக்கமும் சிலரிடம் இருந்தது.
இதற்கு காரணம் ட்ரெண்டிங்தான். ஈருடல், ஓர் சக்தி, ஓர் உடல், இரு சக்தி என்றெல்லாம் நிறைய விளக்கங்களை அளித்துள்ள அன்னபூரணி அம்மா நேற்றைய தன்னுடைய பேட்டியில் பல முகபாவங்களை கொண்டிருந்தார்.
கோபக்கார அம்மா, பாசக்கார அம்மா, பதுங்கும் அம்மா, பாயும் அம்மா என பல பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அன்னபூரணி அரசு அம்மாவின் உடை, நகை, அலங்காரம் குறித்த தகவல்கள் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2013ம் ஆண்டு, ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பார்த்த அன்னபூரணிக்கும், தற்போது உள்ள அன்னபூரணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட தோற்றத்தில் அவர் மாறிவிட்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக அவரது உடை மற்றும் அலங்காரம் பெண்கள் பலரை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஆசி வழங்கும் அவரது கரங்களை பற்றியிருக்கும் வளையல்களை பற்றி அறிய பலருக்கு ஆவல் மிகுந்துள்ளது.
அன்னபூரணி அரசு அம்மா அணிந்திருக்கும் வளையல், அரபு ஸ்டைல் வளையல். வளைந்து, நெழிந்து, முறுக்கலான தோற்றத்தில் இருந்தது. அவர் நினைத்தது எல்லாம் நன்றாகவே நடந்து வந்தது.
அவர் எறிந்த பந்து, அவருக்கே தற்போது திரும்பி விட்டது.பழைய வீடியோ, அவரின் புதிய வீடியோக்களை நாசமாக்கிவிட்டது.சிவசங்கர் பாபா போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி, நவீன ஆதிபராசக்தியாக அமரலாம் என்கிற ஆசையை, அடியோடு பிடுங்கி புதைத்து விட்டது.
செங்கல்பட்டு இனி வேலைக்கு ஆகாது... முதல் சரியில்லாமல் போனதால், தற்போது முடிவை வேற ரூட்டிற்கு மாற்றியுள்ளார் அன்னபூரணி அரசு அம்மா.
அதாவது, ‛அம்மா எனர்ஜி தர்ஷன்’ என்ற பெயரில், வரும் ஏப்ரல் 3ம் தேதி மிகப்பெரிய அருள்வாக்கு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளையெல்லாம் செய்துள்ளார் அரசு அம்மா.
இந்த முறை அவரை பார்ப்பதற்கு கடுமையான டிமாண்ட்டாக இருக்கிறதால், நபர் ஒருவருக்கு ரூ.700 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். அதுவும், பேஸ்புக் ஆன்லைனில். அன்னபூரணி அரசு அம்மா என்று தனியாக பேஸ்புக் ஆரம்பித்திருக்கிறார். ஆன்லைன் வழியாக, முன்பதிவு செய்து கொள்ள பிரத்யேக இணையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த பேஸ்புக் ஆன்லைனில் ‘மனமுருகி தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு அருள் புரியும் பராசக்தி அம்மா’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த நம்ம நெட்டிசன்கள், அரசு அம்மா எனக்கு அருள் புரியுங்க.. உங்க ஆசீர்வாதம் வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் .
https://www.facebook.com/AnnapuraniArasuAmma/posts/710323460331042