இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான் - அதோட அர்த்தம் பாருங்களேன்..!
இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த வார்த்தை
ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு (2023) சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மனநிலை ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் சிறந்த வார்த்தையை முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில்தான் ரிஸ் தேர்வாகியுள்ளது.
Rizz
கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன்.
சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்.
காதல் மற்றும் கவர்ச்சி இணைய மொழியாக இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.