உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்; நிர்மலா சீதாராமன் தான் டாப் - 4 இந்தியர்கள்!

Smt Nirmala Sitharaman India
By Sumathi Dec 06, 2023 11:44 AM GMT
Report

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த பெண்கள்

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பிஸ்னஸ் இதழ் ஃபோர்ப்ஸ். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது 2023ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

nirmala-sitharaman

அதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஊடக பிரபலங்கள் எனப் பலரும் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 4 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தில் உள்ளார். அதேபோல ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் சிஇஓ ரோஷ்னி நாடார் 60வது இடம் பிடித்துள்ளார்.

ராமர அவமானம் படுத்திய போது சும்மா இருந்தோமே ...அது தான் சனாதனம்..நிர்மலா சீதாராமன்

ராமர அவமானம் படுத்திய போது சும்மா இருந்தோமே ...அது தான் சனாதனம்..நிர்மலா சீதாராமன்

 நிர்மலா சீதாராமன்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மொண்டல் (70வது இடம்), மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா (76 இடம்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

rishini nadar

அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.