திருமணமாகி 1 வருஷம்; நல்ல செய்தி சொன்ன ரித்திகா - குவியும் வாழ்த்துகள்!
நடிகை ரித்திகா தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.
நடிகை ரித்திகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்தவர் ரித்திகா. இதற்கு முன்னதாக தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமானார்.
தொடர்ந்து, விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்ற நபரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களிலேயே ரித்திகா மீண்டும் நடிப்பை தொடங்கி இருந்தார்.
திருமண நாள்
ஆனால் சில மாதங்களிலே சீரியலில் ஏற்பட்ட கதையின் மாற்றம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை சொல்லாமலேயே திடீரென்று ரித்திகா சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில், தன்னுடைய கணவரோடு கோவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தனக்கு திருமணம் முடிந்து 365 நாட்கள் ஆகிவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதல் திருமண நாளை கொண்டாடும் இவருக்கு சின்னத்திரை, பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video