எளிமையான முறையில் திருமணம் செய்த ரித்திகா - கணவர் பற்றி உருக்கம்!
ரித்திகா விஜய் டிவி பிரபலத்தை எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார்.
ரித்திகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இதற்கு முன்னதாக தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமானார். அப்போது பாலாவுடன் இவர் பழகி வந்ததை காதல் என கிசு கிசுக்கப்பட்டது.
அப்போது வீடியோ வெளியிட்ட ரித்திகா, ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவார்களா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதனால் இப்படி யாரும் பேசாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
திருமணம்
தொடர்ந்து, சிங்கிளாக வலம் வரும் இவர், விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்ற நபரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியது. அவரைத்தான் ரித்திகா காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து வினு என்பவரை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு, தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து இறுதியாக திருமதி வினு. கடவுளின் கிருபையுடன் உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் எங்களுக்கு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு நவம்பர் 27ஆம் தேதி மாலை வரவேற்பு நடைபெற உள்ளதாம்.