Secret out: விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்யப்போகும் ரித்திகா!
பாக்கியலட்சுமி ரித்திகா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரித்திகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இதற்கு முன்னதாக தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமானார். அப்போது பாலாவுடன் இவர் பழகி வந்ததை காதல் என கிசு கிசுக்கப்பட்டது.

அப்போது வீடியோ வெளியிட்ட ரித்திகா, ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவார்களா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதனால் இப்படி யாரும் பேசாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
திருமணம்?
இந்நிலையில், சிங்கிளாக வலம் வரும் இவர், விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்ற நபரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரைத்தான் ரித்திகா காதலித்து வந்தாராம்.

நவம்பர் 27ஆம் தேதி மாலை வரவேற்பு நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் விஜய் டிவி புகழ் டிடி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ரித்திகாவை மணமகள் எனக் கூறி திருமண தகவலை உறுதி செய்துள்ளார்.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் : அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை IBC Tamil