கிளாமர் ஹீரோயினாக மாறிய ரித்திகா சிங் - அசரவைக்கும் புகைப்படங்கள்

Ritika Singh ActressRitikaSingh
By Petchi Avudaiappan Oct 27, 2021 06:51 PM GMT
Report

நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தமிழ் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமான ரித்திகா சிங் இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனை என்பதால் அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 

இதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை,  அரவிந்த் சாமியின் வணங்காமுடி ஆகிய படங்களிலும் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

இதனிடையே ரித்திகா சிங் சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.