சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை; 'சொன்னா கேக்க மாட்டாரு' - இந்திய வீரர் நெகிழ்ச்சி!
தனது தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்வது குறித்து இந்திய வீரர் ரிங்கு சிங் பேசியுள்ளார்.
ரிங்கு சிங்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ரிங்கு சிங். இதன் மூலம் கடந்த ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார்.
இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடி, 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும் விளாசியுள்ளார். இந்நிலையில் அவரின் தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று வைரலானது.
மிகவும் கடினம்
இதுகுறித்து ரிங்கு சிங் கூறுகையில் "நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன்.
ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். அவரது வேலையை அவர் விரும்புகிறார். ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
Rinku Singh's father is seen supplying gas cylinders, Even as Rinku plays for India, his father continues his work as a gas cylinder provider.
— Vipin Tiwari (@Vipintiwari952_) January 26, 2024
Hardworking family ? pic.twitter.com/pjOrXOwG1K