இந்த 2 நாடுகளை தாக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது - புதின் பரபரப்பு பேச்சு!

Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine Russia
By Sumathi Nov 22, 2024 12:45 PM GMT
Report

இரண்டு நாடுகளை தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் 

தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதம் மூலம் பதிலடி தருவோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்திருந்தார்.

putin

இந்நிலையில், அமெரிக்கா தந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்கிய நிலையில், சில தொழிற்சாலைகள் மீது ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. இந்நிலையில் இதுகுறித்து உரையாற்றியுள்ள புடின்,

100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த நாடு - எத்தனை இந்தியர்கள்?

100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த நாடு - எத்தனை இந்தியர்கள்?

புடின் கொந்தளிப்பு

புதிதாக தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சானிக் நடுத்தர தூர ஏவுகணை, அணு ஆயுதம் இன்றி, உக்ரைனில் உள்ள புகழ்வாய்ந்த தொழிற்சாலைகளை தாக்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தயாரான ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்கப்பட்டுள்ளதற்கு இது பதிலடி.

zelensky

அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு முகாந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை தங்கள் நாட்டை ஒரு சோதனைக் கூடமாக புத்தியற்ற ஒரு அண்டை நாடு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.