செல்ல நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு; பூங்காக்களில் அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு!

Tamil nadu Chennai Greater Chennai Corporation
By Swetha May 07, 2024 08:04 AM GMT
Report

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

செல்ல நாய் 

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவும் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகின்றனர்.

செல்ல நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு; பூங்காக்களில் அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு! | Restrictions On Bringing Pet Dogs To Park

இதற்கிடையில் மாலை நேரத்தில் பூங்காவிற்கு அருகில் இருக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துள்ளன.குழந்தை அலறும் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றபோது,

5 வயது சிறுமி படுகாயம் - ஆசையாய் வளர்த்த செல்ல நாய்கள் செய்த கொடூரம்!

5 வயது சிறுமி படுகாயம் - ஆசையாய் வளர்த்த செல்ல நாய்கள் செய்த கொடூரம்!

கட்டுப்பாடுகள்

அவரையும் நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

செல்ல நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு; பூங்காக்களில் அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு! | Restrictions On Bringing Pet Dogs To Park

அதன்படி, கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

  • பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.
  • ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.3. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும். செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது கட்டுப்படுத்தப்படும்.
  • பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.
  • இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.
  • செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் டிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும். இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.
  • வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும்.
  • அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.
  • விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு. இருப்பிடம். தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.