நாய்கள் கடித்து சிறுமி படுகாயம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்கும் - ராதாகிருஷ்ணன்!

Tamil nadu Chennai
By Jiyath May 06, 2024 10:28 AM GMT
Report

நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.    

சிறுமி படுகாயம்

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே வசித்து வருபவர் புகழேந்தி. இவர் தான் வளர்க்கும் 2 நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சுதக்ஷா (5) என்ற சிறுமியை நாய்கள் கடித்துள்ளன.

நாய்கள் கடித்து சிறுமி படுகாயம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்கும் - ராதாகிருஷ்ணன்! | Girl Babay Badly Injured By Dogs In Chennai

இதனால் காத்திக் கூச்சலிட்ட சிறுமியை காப்பாற்ற அவரது தாய் முயன்றுள்ளார். அப்போது அந்த நாய்கள் அவரையும் கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில் "நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி,

நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா?

நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா?

மருத்துவ செலவுகள் 

அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை வளர்த்து வந்துள்ளனர்.

நாய்கள் கடித்து சிறுமி படுகாயம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்கும் - ராதாகிருஷ்ணன்! | Girl Babay Badly Injured By Dogs In Chennai

நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவச் செலவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.