உணவக விளம்பரத்தில் ஆலியா பட் வீடியோ - குவியும் எதிர்ப்புகள்! காரணம் என்ன?
பாகிஸ்தான், கராச்சியில் உள்ள ஒரு உணவகத்தின் முகப்பில், பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியைப் பயன்படுத்தி விளம்பரம் செய்துள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
நடிகை ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி பலரது கவனத்தை ஈர்த்தது. இதில் கங்குபாயாக நடித்திருந்த ஆலியா பட்டிற்கு பாராட்டுகள் குவிந்தன.
இது நிஜத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்து, பல அவமானங்களைக் கடந்து பிற்காலத்தில் சமூகத்தில் பெரும் செல்வாக்குடன் ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக மாறிய பெண்ணின் கதை.
கங்குபாய் கத்தியவாடி
இந்த படத்தில், பாலியல் தொழில் செய்வோரின் விடுதியின் முன்பு நின்று ஆலியா கை நீட்டி கூப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த வீடியோவைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள ஸ்விங் உணவகம்,
"Aja na Raja - what are you waiting for?" என்ற தலைப்புடன், இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்திருந்தது. அதில் கூடவே, Men's Monday with 25% discount for men என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்ஸ்டாகிராமில் விளம்பரம்
உண்மையில் சலுகைகள் கொடுப்பதாயின், வேறு ஏதேனும் முறையை பயன்படுத்தி விளம்பர படுத்தியிருக்கலாம். ஆனால், ஒரு பாலியல் தொழிலாளியாக தொடர்பான படத்தின் காட்சியை,
அதுவும் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையின் வீடியோவை, பயன்படுத்தி விளம்பரப்படுத்தியது, கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. இதை சீப் புரொமோஷன் என்று குறிப்பிட்டிருந்த இன்டெர்னெட் சமூகம், நீங்கள் செய்திருக்கும் காரியத்தைக் கொஞ்சம் சரி பார்க்க வேண்டும்.
சீப் புரொமோஷன்
பயன்படுத்தப்பட்ட காட்சியின் பின் இருக்கும் வலிகளை மதிக்காமல், உங்கள் தேவைக்காக அதைப் பயன்படுத்தியுள்ளது, உங்கள் அறியாமையையும், பெண்ணடிமைத்தன சிந்தனையையும் குறிக்கிறது என்று குரலெழுப்பியிருந்தது
இதற்கு பதிலளித்த ஸ்விங் உணவகம், இந்த திரைப்படம், மற்றும் இந்த பதிவு ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டது. எப்போதும் போலவே உங்களுக்கும் அதே அன்போடு சேவை செய்வோம்.
ஸ்விங் உணவகம்
நாங்கள் எவரின் உணர்ச்சியையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இதை செய்யவில்லை என்று குறிப்பிட்டது. மேலும் படத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் பாராட்டு, உணவகம் பயன்படுத்தினால் பாவமா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும், இந்த விளம்பரத்தின் பயன்பாட்டுக்கு எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது.
தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்திருக்கிறேன் - சமந்தா வேதனை!