பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயம் - இலங்கையின் அவலநிலை!
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் பாலியல் தொழில் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலை
பணவீக்கம் தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், நிர்ப்பந்தம் காரணமாக தற்போது இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.
இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தி டெலிகிராப் பத்திரிகையில் வெளியான அறிக்கையில், நிதி நெருக்கடி காரணமாக பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஒரு பாலியல் தொழிலாளி தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கும் போது, பொருளாதார நிலைமைகள் அத்தகைய சூழ்நிலையை கட்டாயப்படுத்தியதாகவும், குழந்தைகளுக்கு உணவளிக்க இதையெல்லாம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Standup Movement Lanka என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் மட்டும் கொழும்பில் பாலியல் தொழிலில் சேரும் இளம் பெண்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகவும். இவர்களில் பெரும்பாலான பெண்கள். ஜவுளித் தொழிலுடன் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது
இலங்கையில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் இதற்கான பகுதி இல்லை என்றாலும், அங்கு ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில்
இந்த பணி நடப்பதாக அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில், புதிய பெண்கள் இப்பணியில் சேருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.