ஐ.நா வரை அதிர்வலையை ஏற்படுத்திய நபிகள் நாயகம் குறித்த கருத்து : வலுக்கும் கண்டனம்!
நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் இழிவான கருத்தால் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இழிவான கருத்து
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.
அப்போது, முகமது நபிகள் குறித்து இழிவான கருத்துகளை அவர் அந்த விவாத நிகழ்ச்சியில் கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

முஸ்லிம்களின் இறை தூதரான நபிகள் குறித்து இழிவாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது.
அதேபோல், டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரையும் கட்சியில் இருந்து நீக்கியது பாஜக.
உலக நாடுகள் கண்டனம்
இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்துக்கு கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமையன்று கண்டனம் தெரிவித்தன.
إن الاجتراء الوقح البذيء من الناطق الرسمي باسم الحزب المتطرف الحاكم في الهند على رسول الإسلام ﷺ وعلى زوجه الطاهرة أم المؤمنين عائشة رضي الله عنها هو حرب على كل مسلم في مشارق الأرض ومغاربها، وهو أمر يستدعي أن يقوم المسلمون كلهم قومة واحدة pic.twitter.com/T58Ya1dGox
— أحمد بن حمد الخليلي (@AhmedHAlKhalili) June 4, 2022
இதை தொடர்ந்து நேற்று ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
மேலும், வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் போர்க்குரல் உயர்த்தியுள்ளன.
ஐ.நா திட்டவட்டம்
இந்நிலையில் இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு ஐக்கிய நாடுகளின் சபையான ஐ.நாவும் கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரிடம் பாகிஸ்தான் நிருபர் ஒருவர், நுபுர் சர்மா கருத்து குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக், "நான் இது தொடர்பான செய்திகளைப் பார்த்தேன். ஆனால், அந்த சர்ச்சைக் கருத்து என்னவென்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும், ஐ.நா. பொதுச் சபை அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும், மத சகிப்புத்தன்மை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது" என தெரிவித்தார்.
முடிவுக்கு வராத துப்பாக்கி கலாச்சாரம் - அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்!