சவூதி அரேபியா,குவைத்,பஹ்ரைன் நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிப்பு..!

India Saudi Arabia
By Thahir Jun 06, 2022 08:04 AM GMT
Report

நபிகள் நாயகம் பற்றி பாஜக நிர்வாகிகள் அவதுாறு கருத்து தெரிவித்த நிலையில் சவுதி அரேபியா,குவைத்,பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில் இந்தியா பொருட்களை விற்பனை செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இழிவான கருத்து 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபி பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

சவூதி அரேபியா,குவைத்,பஹ்ரைன் நாடுகளில்  இந்திய பொருட்கள் புறக்கணிப்பு..! | Boycott Of Indian Product In Arab Country

இந்தநிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.இவர்களின் கருத்துக்கு அரபு நாடுகளான கத்தார்,ஈரான்,சவூதி அரேபியா,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சவூதி அரேபியா,குவைத்,பஹ்ரைன் நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உள்ள இந்தியா பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!