விந்தணுவில் விஷம்.. இந்த இனம் அழியும் ஆபத்து - ஆய்வில் மிரண்டுபோன ஆய்வாளர்கள்!
விஷம் கலந்து விந்தணுக்களைக் கொண்டு செல்லும் கொசுக்களை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விந்தணு
இன்றைய காலகட்டத்தில் சிறிய உயிரினங்கள் முதல் பெரிய விலங்குகள் வரை புதிய புதிய நோய்கள் பரவி வருகிறது. சமீபகாலமாகச் சீனாவில் ஹெச்எம்பி வைரஸ் நோய் தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கொசுக்கள் தான்.
பொதுவாக மனித உடலில் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறது. இதன் மூலம் மலேரியா மற்றும் டெங்குகாய்ச்சல் நோய்கள் பரவுகிறது. இந்த வகையான பெண் கொசுக்களைக் கொல்ல விஷம் கலந்து விந்தணுக்களைக் கொண்டு கொல்லும் கொசுக்களை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கொசு
இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஆய்வு மேற்கொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட புது வித ஆண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்களின் விந்தணு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்குமாம்.
இவை பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் போது விஷம் இருக்கும் விந்து பெண் கொசுக்களின் உடலுக்குச் சென்றுவிடும். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்கள் உயிரிழந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.