சீனாவில் பரவும் புதிய வைரஸ்..கொரோனாவை போல எளிதில் பரவக்கூடியது - சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சீனா
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாகப் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த பெருந்தொற்றின் தாக்கம், உலக மக்களிடையே சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இந்நிலையில், சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக வெளியாகி உள்ளது. இதனால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸூக்கு ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (human metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது கொரோனாவை போலவே இருமல், காய்ச்சல், ஜலதோசம் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இவை இருமல், தும்மல், தொடுதல் உள்ளிட்டவை மூலம் எளிதில் பரவக்கூடியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ்
இந்த நிலையில், சீனாவின் அண்டை நாடான இந்தியாவுக்கு இந்த வைரஸால் ஆபத்து உள்ளது எனச் செய்திகள் வெளியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.ஹெச்.எம்.பி.வி வைரஸால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை .
எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.