வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ்.. மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சீனா- மக்களின் நிலை?
சீனாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீனா
சீனாவில் கடந்த 2019 ஆம்டு மார்ச் மாதம் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.மேலும் தற்பொழுது நோயின் தாக்கத்திலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருக்கும் சூழலில்,
மீண்டும் சீனாவிலிருந்து ஒரு வைரஸ் பரவி வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து SARS-CoV-2 (Covid-19)என்ற எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சீனா பல வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இன்புளுயன்சா ஏ, ஹெச்.எம்.பி.வி, மைகோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் 19 ஆகிய வைரஸ் அறிகுறிகளும் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சீனாவின் பல மாகாணங்களில் வைரஸ் பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
புதிய வைரஸ்
பொதுவாகவே குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் சீன மக்கள் பல்வேறு சுவாச தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை தற்போது வரையில் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.அதுமட்டுமில்லாமல் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.