12 நாட்கள் வரை நீடித்த Traffic jam..நகரமே போக்குவரத்தால் ஸ்தம்பித்த நிகழ்வு- எங்கு தெரியுமா?
12 நாட்கள் நீடித்த உலகின் மிக நீளமான போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போக்குவரத்து நெரிசல்
இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை,கொல்கத்தா,பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இங்கு மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
இதன் காரணமாக 2 0 முதல் 25 நிமிடங்கள் வரை மக்கள் தங்கள் வாழ்நாளில் பாதியைப் போக்குவரத்து நெரிசலில் கழிக்கின்றனர்.அந்த வகையில், 12 நாட்கள் நீடித்த உலகின் மிக நீளமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
12 நாட்கள்
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங் - திபெத் எக்ஸ்பிரஸ்வேயில் சீனா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனால் 12 நாட்களாக வரை கார், மற்றும் பேருந்துகளில் சிக்கித் தவித்தனர். எங்குத் திரும்பிப் பார்த்தாலும் வாகனங்களாகத் தெரிந்தனர்.
இதனால் அவர்கள் அந்த பகுதியில் கூடாரம் அனைத்து நாள்களைக் கழித்தனர். இந்த போக்குவரத்தைச் சரி செய்யச் சீன அரசு திணறியது. அந்த நகரமே போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.இந்த சம்பவம் ஆகஸ்ட் 14, 2010 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.