இந்த உணவுக்கு அதிகம் செலவிடும் இந்தியர்கள்..ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் -எவ்வளவு தெரியுமா?
இந்தியர்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியைப் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்காகச் செலவிடுவதாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள்
2023-24 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் இந்தியர்கள் வருமானத்தில் கணிசமான பகுதியைப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் நுகர்வு செய்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 11.09% தொகையை இதற்குச் செலவிடுகின்றனர்.
குறிப்பாக நகர்ப்புறங்களில், உள்ள மக்கள் உணவு செலவினங்களில் 39% க்கும் அதிகமானவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வாங்குவதில் செலவிடப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
இவை பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற அதிக சத்தானவற்றைத் தவிர்த்து மக்கள் ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி அதிகம் செல்வது தெரியவந்துள்ளது.
மேலும் சுமார் 20 ஆண்டுகளாக இந்த செலவினம் 10 சதவீதத்துக்குக் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பைக் கடந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் மூலம் சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக உள்ளது.
இதனால் இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.