ராட்சத பள்ளம்; 80 மணி நேர தவிப்பு, ஒருவர் சடலமாக மீட்பு - என்ன நடக்கிறது வேளச்சேரியில்.?
ராட்சத பள்ளத்தில் விழுந்து சிக்கிய இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புயல் எச்சரிக்கை
சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மழை பாதிப்புகளை பார்வையிட வந்த கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான (‘சைட் இன்ஜினீயர்’) வேளச்சேரி ஜெயசீலன் (29),
செல்போனுக்காக நீர்த்தேகத்தில் இருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு அபராதம் விதிப்பு..!
ஒருவர் பலி
பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உட்பட அப்பகுதியில் இருந்த 5 ஊழியர்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்தனர். உடனே விரைந்த போலீஸார் 3 ஊழியர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஜெயசீலன், நரேஷ் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி 4-வது நாளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நரேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மற்றொருவரான ஜெயசீலனுக்கு திருமணமாகி 11 மாதம்தான் ஆகிறது. அவரது மனைவி மஞ்சு இரண்டரை மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவர் குறித்து அறிய கடந்த 4 நாட்களாக அழுதபடி அங்கேயே இருந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது