நெல்லை கல்குவாரி விபத்து - 3 பேர் பலி

By Irumporai May 15, 2022 04:12 AM GMT
Report

நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது.

இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது.

மேலும், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.