செல்போனுக்காக நீர்த்தேகத்தில் இருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு அபராதம் விதிப்பு..!
நீர்த்தேக்கத்திலிருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கதில் விழுந்த ஐபோன்
சத்தீஸ்கர் மாநிலம், கன்கெர் மாவட்டத்திலுள்ள கெர்கட்டா அணைப் பகுதியிலிருக்கும் பாரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரி ராஜேஷ் விஸ்வாஷ் என்பவர் விடுமுறையை கழிக்கச் சென்றார்.
அவர் நீர்த்தேக்கத்துக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவருடைய ஐபோன் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டது.
15 அடி ஆழம் கொண்ட அந்த நீர்த்தேக்கதில் விழுந்த ஐபோன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடையதாம். அதனால் உள்ளூர் மக்களைத் தண்ணீரில் இறங்கச் சொல்லி ஐபோனைத் தேடிப்பார்த்தார் ராஜேஷ் ஆனால் தண்ணீருக்கடியில் இருந்த சேற்றில் போன் சிக்கிக் கொண்டது.இதனால் போன் கிடைக்கவில்லை.
அபாரதம் விதித்து பணியில் இருந்து சஸ்பெண்ட்
இதையடுத்து இரண்டு ராட்சத மோட்டார்களை வாங்கிக் கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்ற ஆரம்பித்தார் ராஜேஷ். மூன்று நாட்கள் தொடர்ந்து மோட்டார் மூலம் 21 லட்சம் தண்ணீரை நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறினார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் தண்ணீர் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தினர்.
தண்ணீரை நீர்த்தேக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திய ராஜேஷுக்கு ரூ.53,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அவர் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.