"போலீஸ்க்கு சொல்லியும்...வரல "..!பிரபல செய்தியாளருக்கு சரமாரி அறிவாள் வெட்டு..!
பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அரிவாள் வெட்டு
தனியார் தொலைக்காட்சியில் பிரபல செய்தியாளராக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பணியாற்றி வருபவர் நேசபிரபு.
நேற்று வழக்கம்போல் தனது பணியில் இருந்த போது, அவரது பின்தொடர்ந்து கும்பல் ஒன்று சட்டென வழிமறித்தது, வைத்திருந்த அரிவாளால் நேசபிரபுவை சரமாரியாக தாக்கி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
4 முறை...
இதில், பலத்த காயமடைந்த நேசபிரபு, முதலில் பல்லடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவத்திற்கு செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, நேசபிரபு தான் நோட்டமிடப்படுவதாக உணர்த்த போதே,
இது குறித்து 4 மணி நேரத்திற்கு முன்பாகவே காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார் என்று நேசபிரபு பணிபுரிந்துவரும் தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.