தன்பாலின உறவுக்கு மறுத்ததால் கொன்றேன் - 7 வயது சிறுவன் கொலை வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்!
8 வயது சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுவன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் உள்ளது.
இந்த காவல் நிலையம் முன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கழுத்து, கை, வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக வேம்பார் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (19) என்பவரை கைது செய்தனர். அப்போது சிறுவனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திடுக்கிடும் தகவல்கள்
அதில், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறுவன் வீட்டில் இருந்துள்ளான். இதனை அறிந்த தாமஸ், சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுவன் மறுத்து சத்தம் போட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தாமஸ் மறைத்து வைத்திருந்த 2 சிறிய ரக கத்தியால் சிறுவனின் கழுத்து, வயிறு, கைப்பகுதியில் கொடூரமாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவனை தூக்கிச்சென்று கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேற்கண்டவாறு தாமஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.