பேராபத்து: பனியில் உறைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ் - விஞ்ஞானிகள் வார்னிங்!
சைபீரிய பகுதியில் இருந்து சில வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
Zombie Virus
உலகில் வடதுருவத்தில் அமைந்துள்ளது ஆர்டிக் பகுதி. இந்த பகுதி முழுவதும் எப்போது பனிப் போர்த்தியிருக்கும். பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக காணப்பட்டாலும் பல ஆபத்துக்களை உள்ளடக்கியது.
தற்போது அதிக வெப்பநிலை உயர்வு காரணமாக ஆர்டிக் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் ஆபத்தான வைரஸ்கள் தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறி மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை தர வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை
அந்த வகையில், சைபீரியன் பெர்மாஃப்ரோஸ்டில் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 48,500 வருடங்களாக புதையுண்டுள்ள சில வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் பழைமையான `ஜோம்பி வைரஸ்' எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ்களின் தொற்று ஏற்பட்டால், பூமியின் தென் பகுதிகளில் தொடங்கி, வடக்கு நோக்கி அதன் பாதிப்பு தொடரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.