இது லிஸ்ட்லயே இல்லையே: 48,500 ஆண்டு பழைய ZOMBIE VIRUS - பேராபத்து!

Russian Federation Virus Europe
By Sumathi Nov 30, 2022 10:05 AM GMT
Report

48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் பனிக்குள் உயிருடன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜாம்பி வைரஸ்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரி ஒன்று பருவநிலை மாற்றம் காரணமாக உருகியுள்ளது. அதில் ஆய்வு செய்த ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் பனிப்பாறைகளுக்கு கீழே இருந்து, சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர்.

இது லிஸ்ட்லயே இல்லையே: 48,500 ஆண்டு பழைய ZOMBIE VIRUS - பேராபத்து! | 48000 Year Old Zombie Virus Discovered In Siberia

அவற்றை ஆய்வு செய்ததில் அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த "ஜாம்பி வைரஸ்" எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேராபத்து?

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பனிப்பாறைகள் உருகும் போது இதுபோன்ற பழமையான வைரஸ்கள் வெளிப்பட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும்,

தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி இது தாக்கும் என்பது மதிப்பிடுவது சாத்தியம் இல்லாதது என கூறுகின்றனர். இருந்தாலும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையிலும் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும் ஆபத்துக்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.