செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? - நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம் - வெளியான தகவல்
செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் நாசாவின் கனவு திட்டம் 2030-க்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்திருந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோன்று செவ்வாய் கிரக பற்றிய ஆய்வுகள் இரவு பகலாக தொடர்ந்து கொண்டே வருகின்றன.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்?
இந்நிலையில், கலிபோர்னியாவில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டில் நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ரோவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது.
இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதியில் உள்ள 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு, அதில் இருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவர் சேகரித்திருந்தது.
கியூரியாசிட்டியின் உள்ளே அமைக்கப்பட்ட சிறிய ஆய்வகத்தில் பாறை துகள்கள் அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட்டு, அதன் அணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு துல்லியமாக அளவிடப்பட்டது. உயிரினங்கள் உருவாக ஆர்கானிக் கார்பன் அடிப்படை தேவை என்பதால், அதை பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - அதிர்ச்சியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா?