17 மாதம் சிறை.. ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா!
ஆம் 17 மாதங்களுக்குப் பிறகு ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா விடுதலை செய்யப்பட்டார்.
ஆத்மி கட்சி
டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.இந்த நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மணிஷ் சிசோடியாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் , 10 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகையை வழங்கவும் உத்தரவிட்டனர்.
ஜாமின்
இதனை தொடர்ந்து திகார் சிறையில் இருந்து டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று மாலை வீடு திரும்பினார். மணீஷ் சிசோடியாவை வரவேற்க ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொண்டர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் மணிஷ் சிசோடியாவை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
தொடர்ந்து திகார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா வெளியே வந்ததும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து பேசினார்.